
போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக இண்டர்நெட் டேட்டா இல்லாத தனி ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என TRAI உத்தரவிட்டுள்ளது.
டேட்டா இல்லாத திட்டங்களின் கட்டணத்தை அதற்கேற்ப குறைக்க வேண்டும் என்றும், 28 நாட்கள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப புதிய திட்டங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்கிறோமோ அடுத்த மாதம் அதே தேதி வரை பயன்படுத்தக்கூடிய திட்டங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.