
தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசாரமாகும்.
காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கியூஆர் கோடு அட்டை பெற்றுள்ள 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் சமூக வலைத்தள நேரலைகளில் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.