
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் சொலனி டெட்டே (38), கிழக்கு கேப் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
11 விநாடிகளில் எதிராளியை வீழ்த்தி கின்னஸ் சாதனை படைத்த டெட்டே, தனது காதலியுடன் காரில் இருந்தபோது பைக்கில் வந்த இருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரது காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடிய குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.