
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் நவம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (21.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 846 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் குரூப் 1 பதவிகளில் 43 இடங்களும், குரூப் 2 பதவிகளில் 803 காலிப்பணியிடங்களும் அடங்கும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.