
திருநெல்வேலியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மழை பெய்யாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் கலெக்டர் ஆனந்த்மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுமுறை கேட்டு நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் பதிவுகளுக்கு நெல்லை வட்டாரப் பேச்சு வழக்கிலேயே பதிலளித்த கலெக்டர், உண்மையாகவே கனமழை பெய்தால் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.