வலது பக்கத்தில் மட்டும் தொடர்ந்து தலைவலி ஏற்படுவது டெம்போரல் ஆர்டரைடிஸ், ட்ரைஜெமினல் நியூரிஜியா அல்லது சைனஸ் போன்ற நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வது 'ரிபவுண்ட் தலைவலி'க்கு வழிவகுக்கும் என்றும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கழுத்து தசை பிடிப்பும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைவலியுடன் காய்ச்சல், கழுத்து விறைப்பு, பார்வை மங்குதல் அல்லது பேசுவதில் தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.