
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பாட்டன்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
கடந்த ஜூலை 4ஆம் தேதி தொடங்கிய இந்த டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மைதானத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.