
அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் உரிமையை இழந்ததால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.190 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் மைதானங்களைச் சரிசெய்யத் தவறிய காரணங்களால், இலங்கையில் நடைபெறவிருந்த இந்தப் போட்டி இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரால் அமைக்கப்பட்ட இடைக்கால கமிட்டி, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முயற்சிப்பதாக வாரிய செயலாளர் பிரகாஷ் ஷாப்டர் விளக்கம் அளித்துள்ளார்.