
கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் தொடரில் இந்திய வீரர் லோகேஷ் சுப்பிரமணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆண்கள் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு இறுதிப்போட்டியில் இரண்டாம் நிலை வீரரான லோகேஷ், மலேசியாவின் முகம்மது இப்வத் ஜுல்கிப்லியை எதிர்கொண்டார்.
தொக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய லோகேஷ் 11-6, 11-2, 11-8 என்ற நேர் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார்.