
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடமிருந்து டிரேட் முறையில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2026 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ரூ.13 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட லிவிங்ஸ்டன், அதிரடி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீசும் திறன் கொண்டவர்.
2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.