இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடவிருந்த சாய் சுதர்ஷன், வலது கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி காலேவிலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23-ம் தேதி கொழும்பிலும் நடைபெற உள்ளது.