
இந்தோனேசியாவில் 241 பயணிகளுடன் சுரபயாவில் இருந்து பன்ஜர்மாசின் நோக்கிச் சென்ற ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ பயணிகள் கப்பல் ஜாவா கடலில் தொடர்பை இழந்தது.
கப்பல் கடைசியாக கிடைத்த தரவுகளின்படி, பன்ஜர்மாசின் துறைமுகத்தில் இருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் பணியாளர்கள் கப்பலில் இருந்ததால், பன்ஜர்மாசின் மீட்பு குழுவினர் தேடுதல் நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளனர்.