
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உட்பட 5 நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு பட்டியலில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதா மீது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் நாளை இறுதி ஓட்டெடுப்பு நடக்கிறது; அங்கு நிறைவேறிய பின் இறுதியாக அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.