
இங்கிலாந்தில் நடைபெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில், வார்விக் ஷயர் அணிக்காக விளையாடிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மானவ் சுதார் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மொத்தம் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றொரு போட்டியில் நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடிய யுவேந்திர சகால் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், அவரது அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.