
சமீபத்தில் நிகழ்ந்த சைபர் தாக்குதல் ஒன்று தொடர்பில் கனேடிய சைபர் பாதுகாப்பு நிபுணரான எட் டுப்ரோவ்ஸ்கி அமெரிக்காவில் எஃப்.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேக்கர்கள் தொடர்பான தகவல்களை வைத்துக்கொண்டு மிரட்டும் நபர்களிடம் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் உதவி வந்ததாக அறியப்படுகிறது.
ஆனால் தற்போது பிரபல ஹேக்கர் அமைப்புடன் இணைந்து பணம் பறிக்கும் நோக்கில் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.