
சேலம் சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டிற்கு திடீரென சென்ற முதலமைச்சர் விஜய், அங்குள்ள மூதாட்டிக்கு தனது கண் கண்ணாடியை அணிவித்து மகிழ்வித்தார்.
முதலமைச்சர் விஜய் அந்த விவசாயி குடும்பத்தினருக்கு பட்டுப் புடவைகள் மற்றும் பட்டு வேட்டிகளை பரிசாக வழங்கியதோடு, அவர்களுடன் உணர்ச்சிப்பூர்வமாக உரையாடினார்.
விமான நிலையம் செல்லும் வழியில் சாலை ஓரம் நின்றிருந்த மூதாட்டிகளையும் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர், அவர்களின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினார்.