
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என அதில் வாதிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணி வழங்குவதற்கு பதிலாக திறன் வளர்ப்பு பயிற்சியை அரசு வழங்கியிருக்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு கருத்து தெரிவித்தது.