
சென்னை வானகரத்தில் பெண்கள் தங்கியிருந்த அறையின் ஸ்விட்ச் பாக்ஸில் ரகசிய கேமரா பொருத்தி, உடை மாற்றும் காட்சிகளைப் படம் பிடித்த சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 4 பெண்கள், ஸ்விட்ச் பாக்ஸில் இருந்த மாற்றத்தைக் கவனித்து சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வீட்டின் உரிமையாளரின் மகனான சரவணன், கேமராவில் பதிவான காட்சிகளைத் தனது செல்போனில் தொடர்ந்து பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.