
ஆமதாபாத்தில் நடைபெறும் உலக பாரா வில்வித்தை தொடரின் தனிநபர் காம்பவுண்டு பிரிவில், இந்தியாவின் ஷீத்தல் தேவி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதியில் சக இந்திய வீராங்கனை சரிதாவை 145-143 என்ற கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் தேவி வெற்றி பெற்றுள்ளார்.
இதே தொடரில் ரீகர்வ் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மற்றும் பாவ்னா ஜோடி சீனாவை எதிர்கொள்ளும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.