
ஈரானின் கார்க் தீவில் நிறுத்தப்பட்டிருந்த 5 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய மோதல்களின் தொடர்ச்சியாக, இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.