
அமெரிக்காவில் சில்லறை பணவீக்கம் 3.4 சதவீதமாக உயர்ந்ததை அடுத்து, ஃபெடரல் வங்கி வட்டி வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த வட்டி உயர்வால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஏறக்குறைய ரூ.96 எனச் சரிந்துள்ளது.
அந்நிய முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்கவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்காமல் இறுக்கமான நிதிக் கொள்கையைத் தொடர திட்டமிட்டுள்ளது.