
நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிந்து முதலுதவி வழங்க, 'பாராகார்ப்ஸ்' என்ற நவீன ரோபோடிக் கரப்பான்பூச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
குயின்ஸ்லேந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மக்ரோபனேஸ்தியா ரைனோசரஸ் வகை கரப்பான்பூச்சிகளில் கேமரா மற்றும் தானியங்கி மருத்துவ ஊசிகளைப் பொருத்தி இந்தச் சோதனையைச் செய்துள்ளனர்.
சோதனையில் 15 செ.மீ தூரத்தில் 95 சதவீத துல்லியத்துடன் மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இவை மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.