
தனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டில் இருப்பதாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, 25 ஆண்டுகால பயணத்தில் 5 முறை பாலன் டி ஓர் விருது மற்றும் 5 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றுள்ளார்.
தொழில்முறை கால்பந்தில் 1,000 கோல்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 24 கோல்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், ஓய்வுக்குப் பிறகு படல் விளையாட்டில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.