
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் 75 வயதான வி.எஸ்.பாபு, திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் பாபுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், ஓரிரு நாட்களில் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.