/polimer-news/media/media_files/2026/10/16/1-2026-10-16-11-31-08.jpg)
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், வடமாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூப்பர் எல் நினோ பிப்ரவரி வரை நீடிக்கக்கூடும் என்றும், அது தமிழகத்தில் மழைப்பொழிவை அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.