
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சல் ஏற்பட்ட முதல் சில நாட்களை விட 4-வது நாள் முதல் 6-வது நாள் வரையிலான காலம் மிகவும் முக்கியமானதாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் குறைந்தாலும் நோய் ஆபத்து விலகிவிட்டதாக கருதாமல், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொண்டு உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.