
யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த யூடியூபர்களுக்கு, தயாரிப்பு நிறுவனம் சார்பில் பெங்களூரு ஏப்லெக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியான இப்படம், முதல் நாளில் ரூ.101 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் சுமார் ரூ.36 கோடியாக வசூல் சரிந்துள்ளது.
படம் குறித்து அவதூறு பரப்ப ஆகஸ்ட் 28-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.