
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 198 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, வெங்கடேஷ் பிரசாத்தின் சாதனையை முறியடித்து இந்தியாவின் 9வது அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் ஆனார்.
தொடரின் அடுத்த 2 போட்டிகளில் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், 200 விக்கெட்டுகளை எட்டிய 4வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைப்பார்.