
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதுடன், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.