
ஈரான் நாட்டின் கெர்மான் நகரைச் சேர்ந்த இசைக்கலைஞரும் மலையேற்ற வீரருமான அலி சினா முஸ்தபாவிக்கு (38) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதுடன், சதுக்கத்தில் பொதுமக்கள் மீதும் ராணுவ வீரர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கடவுளுக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகவும் ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.