
அர்ஜுன் தாஸ் நடிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'ஜான் டோ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை 'பாகுபலி' படத்தைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா தயாரிக்கின்றனர்.