
தமிழகத்தில் திறந்தவெளி சோலார் திட்டங்கள் மூலம் 204 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என தேசிய சோலார் ஆற்றல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் 1990-ல் 97 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், தற்போது 500 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சோலார் உற்பத்தி திறன் 1,200 ஜிகாவாட்டாகவும், 2070-ம் ஆண்டில் 5,000 ஜிகாவாட்டாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.