
பாலஸ்தீனத்தின் காசா நகரில் தென்மேற்கே டெல் அல்ஹவா பகுதியில் பயணிகள் மினி பேருந்து மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி குற்றம் சாட்டியுள்ளார்.