அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சமூக வலைதள பிரபலமான ஃபிராங்கி லபென்னாவுக்கும், EngineAI நிறுவனத்தின் T800 ரோபோவுக்கும் இடையே MMA முறை சண்டை நடைபெற்றது.
சண்டையின்போது ரோபோ வழங்கிய திடீர் கிக்கால் லபென்னா தடுமாறி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
எனினும், அந்த ரோபோ முழுமையாகத் தன்னாட்சி முறையில் இயங்காமல் ஒரு மனிதரால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.