
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழாவில், கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பா.ரஞ்சித் குரல் கொடுக்கவில்லை என நடிகர் விஜய் விஷ்வா விமர்சித்தார்.
விஜய் விஷ்வாவின் ‘போலிப் போராளிகள்’ என்ற கருத்துக்கு மேடையில் இருந்த கௌசல்யா ஷங்கர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் விஜய் விஷ்வா பேசியது தவறு எனப் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியதால், அவருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.