
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்திற்கு முதலில் இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மாஸ் அறிமுக வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.