
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகப் பரவும் செய்திகள் வதந்தி என மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
குறைவாக வரி செலுத்தியவர்களுக்கு மட்டுமே தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பீட்டில் ஆட்சேபனை இருப்பவர்கள் 15 நாட்களுக்குள் வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.