
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கத்தில் 9 நாட்களாகச் சிக்கியிருந்த கபீர் மகர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சுரங்கத்தின் நுழைவுப் பகுதியைச் சேறும் குப்பைகளும் மூடிய நிலையில், 170 மீட்டர் தொலைவில் இருந்த அவர்களை மீட்புப் படையினர் சத்தத்தைக் கேட்டு மீட்டனர்.
இந்த வெள்ளப் பேரிடரில் நேபாளத்தில் இதுவரை 1,259 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 500 பேர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.