
ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடரின் 9 முதல் 12 வரையிலான இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா சார்பில் ராகுல் திரிபாதி 56 ரன்களும், குர்ணால் பாண்ட்யா 28 ரன்களும் எடுத்தும், அணி 6 ஓவர்களில் 121/4 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.