
ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேம்பாட்டுப் பணிகளுக்காக தற்காலிகமாக தாம்பரம் மற்றும் மாம்பலம் நிலையங்களுக்கு மாற்றப்பட்டிருந்த ரயில்கள், இன்று முதல் மீண்டும் எழும்பூர் நிலையத்திற்கே வந்து சேரும்.
ரயில் இடமாற்றத்திற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.