
ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டில், காம்பவுண்டு வில்வித்தை அணிகள் மற்றும் கலப்பு பிரிவில் இந்தியா மூன்று தங்கம் உட்பட ஒரே நாளில் நான்கு தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றியது.
காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சாஹில் மற்றும் சிகிதா ஜோடி தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றதுடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றது.
துப்பாக்கிச்சுடுதலில் நீரு தண்டா மற்றும் கைனன் செனாய் ஜோடி புதிய ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றதோடு, மல்யுத்தத்தில் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.