
ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
1870-களில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பெரும் பஞ்சத்தின் பின்னணியில், மக்களை காப்பாற்ற போராடும் ஒரு புரட்சிகர வீரனை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.