
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய எபோலா வைரஸ் தொற்றால் 8,067 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தற்போது வரை இத்தொற்றால் 3,901 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் உயிரிழப்பு விகிதம் 48.4 சதவீதமாக உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பண்டிபக்யோ என்ற இந்த வைரஸ் தொற்றால் நாட்டின் 7 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.