
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 3-வது வார முடிவில், வீட்டின் வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான லட்சுமி பிரியா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வாரம் நடத்தப்பட்ட 'ஸ்பாட்லைட்' டாஸ்க்கில் சுமாராகச் செயல்பட்டதாகக் கூறி கேப்டனால் எக்சிட் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்ட அவர், சக போட்டியாளர்களின் சிறப்பு நாமினேஷன் வாக்குகள் அடிப்படையில் வெளியேறினார்.
லட்சுமி பிரியா வெளியேறத் தயாரான போது பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுததுடன், இந்த அதிரடி வெளியேற்றம் வீட்டின் சமன்பாடுகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.