
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், மோகன் ராஜாவின் சினிமா பயணத்தில் 25-வது ஆண்டைக் குறிக்கும் படமாக அமைகிறது.
இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இப்படம், ஒரு குடும்பப் பாங்கான திரைப்படமாக உருவாகிறது.