
சசிகுமார் நடித்துள்ள 'வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி' என்ற 8 எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆகஸ்ட் 7-ல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சசிகுமார் மூசா ரஸா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவருடன் அபர்ணா தாஸ் மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர்.
மதுரையை பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடரின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி, நடிகர்களின் நடிப்பு கதைக்கு மிகுந்த ஆழத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.