/nakkheeran/media/media_files/2026/09/20/dharapuram-tvk-mla-candidate-van-2026-09-20-22-54-54.jpg)
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 06 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா விசில் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தபோது, உப்பாறு அணைக்கு நீர் வராதது மற்றும் திருமூர்த்தி அணைத் தண்ணீர் வீணாவது குறித்து பொதுமக்கள் குறைகளைத் தெரிவித்தனர்.
தற்போதைய மற்றும் கடந்த ஆட்சிகளில் பொதுமக்களின் பிரச்னைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சத்தியபாமா தனது பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டுப் புறப்பட்டார்.