/polimer-news/media/media_files/2026/10/07/rahul-1-2026-10-07-10-29-55.jpg)
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆகாஷ்வாணி பவன் வளாகத்தில் 9 மணி நேரம் நீடித்த போராட்டத்தை முடித்துக்கொள்ள முன்வராததால், ஒத்துழைப்பு கொடுக்க மறுத்த ராகுல்காந்தியை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி இண்டியா கூட்டணி தலைவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.