
ஈரானின் மேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் சுதந்திர வாழ்வு கட்சி (PJAK) உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
பனே நகருக்கு அருகே நடந்த இந்த மோதலில், கொல்லப்பட்டவர்களின் வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஈரான், துருக்கி மற்றும் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள PJAK, 2004 முதல் ஈரானிய இராணுவத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.