
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார்.
ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை வந்தடைந்த அமித் ஷா, பின்னர் ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார்.
அமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.